Skip to main content
🌤️ —°C
வெள்ளி | 14 ஆகஸ்ட் 2026 | 29 ஆடி பராபவ வருடம்

சமூகவலைத்தளங்களில் ஆபாச படங்களை நீக்கக் கோரி நடிகை சுருதிஹாசன் வழக்கு

சமூகவலைத்தளங்களில் ஆபாச படங்களை நீக்கக் கோரி நடிகை சுருதிஹாசன் வழக்கு
நடிகர் கமல்ஹாசனின் மகளும், நடிகையுமான சுருதிஹாசன் மும்பையில் வசித்து வருகிறார்.தனது புகைப்படங்கள் மற்றும் அடையாளத்தை தவறாக பயன்படுத்தி இணையத்தில் ஆபாசமான உள்ளடக்கங்கள் பரப்பப்படுவதாகக் கூறி, மும்பை ஐகோர்ட்டில் அவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.அவர் தாக்கல் செய்த மனுவில், செயற்கை நுண்ணறிவு மற்றும் டீப்பேக் தொழில்நுட்பத்தின் மூலம் தனது முகத்தை மாற்றி, ஆபாசமான மற்றும் விரும்பத்தகாத புகைப்படங்கள், வீடியோக்கள் உருவாக்கப்பட்டு இணையதளங்களில் பரப்பப்படுவதாக தெரிவித்துள்ளார்.இதுபோன்று தன்னை ஆபாசமாக சித்தரிக்கும் உள்ளடக்கங்களை பரப்புவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், ஏற்கனவே சமூகவலைத்தளங்களில் பதிவிடப்பட்டுள்ள ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நீக்க உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.மேலும், வணிக நோக்கங்களுக்காகவும், விளம்பரங்களிலும் தனது அனுமதியின்றி பெயர், புகைப்படம் மற்றும் குரல் பயன்படுத்தப்படுவதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
Advertisement
தனது அடையாளத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தியவர்களிடம் இருந்து ரூ.15 கோடி இழப்பீடு பெற்றுத்தர உத்தரவிட வேண்டும் என்றும் சுருதிஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு