Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வியாழன் | 05 நவம்பர் 2026 | 19 ஐப்பசி பராபவ வருடம்

சசிகுமார், சமுத்திரக்கனி இணைந்து நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் டீசர் வெளியானது

சசிகுமார், சமுத்திரக்கனி இணைந்து நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் டீசர் வெளியானது

நடிகர்கள் சசிகுமார், சமுத்திரக்கனி இணைந்து நடித்துள்ள ‘டெத் இரயில்வே’ திரைப்படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டு, டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது. இந்த டீசர் ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. ‘யாத்திசை’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் தரணி ராசேந்திரன் இப்படத்தை இயக்கியுள்ளார். 1944-ம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் உலகப் போரின் பின்னணியில் இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. ஜப்பான் ராணுவம் இந்தியாவுக்குள் நுழைவதற்காக பர்மா மற்றும் தாய்லாந்து இடையே ரயில் பாதை அமைக்கப்பட்ட வரலாற்றுச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு ‘டெத் இரயில்வே’ திரைப்படம் உருவாகியுள்ளது. போர்க்காலத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் மற்றும் ரயில் பாதை கட்டுமானப் பணிகளின்போது ஏற்பட்ட துயரங்களை மையமாகக் கொண்டு இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

Advertisement
வெளியாகியுள்ள டைட்டில் டீசரில் இடம்பெற்றுள்ள போர்க்காலக் காட்சிகள் படத்தின் கதைக்களம் குறித்த ஆர்வத்தைத் தூண்டியுள்ளன. ஜே. கமலகண்ணன் தயாரித்துள்ள இப்படத்தில் சசிகுமார், சமுத்திரக்கனி, பவானி ஸ்ரீ, கிஷோர், சிவதா, சேயோன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நடிகர் அசோக் செல்வன் சிறப்புத் தோற்றத்தில் இடம்பெற்றுள்ளார். படத்திற்கு சேது முருகவேல் ஒளிப்பதிவு செய்துள்ளார். சார்தக் கல்யாணி இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், படத்தின் டைட்டில் டீசரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. வரலாற்றுப் பின்னணியில் உருவாகியுள்ள ‘டெத் இரயில்வே’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,385
🥈 Silver ₹210.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு