Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வெள்ளி | 25 செப்டம்பர் 2026 | 9 புரட்டாசி பராபவ வருடம்

காஷ்மீரில் ஏழைகளுக்கு ஆண்டுக்கு 6 இலவச கியாஸ் சிலிண்டர்கள்

காஷ்மீரில் ஏழைகளுக்கு ஆண்டுக்கு 6 இலவச கியாஸ் சிலிண்டர்கள்

ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 6 இலவச கியாஸ் சிலிண்டர்கள் வழங்க ஜம்மு-காஷ்மீர் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் சட்டசபை கூட்டத்தொடர் கடந்த செப்டம்பர் 21-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சட்டசபையில் உணவு மற்றும் நுகர்பொருள் விநியோகத்துறை மந்திரி சதீஷ் சர்மா முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, ஏழ்மை நிலையில் உள்ள ‘அந்தியோதயா அன்ன யோஜனா’ குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 6 இலவச கியாஸ் சிலிண்டர்கள் வழங்க அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த அறிவிப்பை ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மேஜையைத் தட்டி வரவேற்றனர். இதற்கு எதிர்க்கட்சியான பா.ஜ.க. உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது மக்களை ஏமாற்றும் நடவடிக்கை என அவர்கள் குற்றம்சாட்டினர்.

Advertisement
இதுகுறித்து சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் சுனில் சர்மா கூறுகையில், ஆண்டுக்கு 12 இலவச சிலிண்டர்கள் வழங்குவதாக வாக்குறுதி அளித்துவிட்டு தற்போது 6 சிலிண்டர்கள் மட்டுமே வழங்கப்படுவதாக விமர்சித்தார். சிலிண்டர், மின்சாரம், ரேஷன் உள்ளிட்ட விவகாரங்களிலும் இதுபோன்ற நிலையே இருப்பதாக அவர் குற்றம்சாட்டினார். மேலும், அனைவருக்கும் 6 சிலிண்டர்கள்கூட வழங்கப்படாதது ஏழைகளுக்கு இழைக்கப்படும் துரோகம் என்றும், ஒரு லட்சம் வேலைவாய்ப்புகள் மற்றும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதாக அளித்த வாக்குறுதிகள் என்ன ஆனது என்றும் சுனில் சர்மா கேள்வி எழுப்பினார். இதனால், ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையில் ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் பா.ஜ.க. உறுப்பினர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,010
🥈 Silver ₹250.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு