Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 14 நவம்பர் 2026 | 28 ஐப்பசி பராபவ வருடம்

காவல் நிலையங்களே மரணக் கூடங்களாக மாறுகின்றனவா? – டிடிவி தினகரன் கேள்வி

காவல் நிலையங்களே மரணக் கூடங்களாக மாறுகின்றனவா? – டிடிவி தினகரன் கேள்வி

மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட லாரி ஓட்டுநர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடும் கேள்விகளை எழுப்பியுள்ளார்.இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்கூறியிருப்பதாவது: தேனி மாவட்டத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ஒருவர் விசாரணைக்காக மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட நிலையில், அங்கேயே சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. தவெக அரசு பொறுப்பேற்ற கடந்த ஆறு மாதங்களில் ஆறுக்கும் மேற்பட்ட காவல் மரணங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்துள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அந்த வரிசையில் தற்போது இந்தச் சம்பவமும் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் நிலையில், உயிரிழந்தவரின் உறவினர்கள் மரணத்திற்கான உண்மையான காரணத்தைத் தெரிவிக்கக் கோரி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் புழக்கம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தத் தவறியுள்ள தவெக அரசின் கட்டுப்பாட்டில் காவல்துறை செயல்படுவதாக தினகரன் விமர்சித்துள்ளார். இந்நிலையில், லாரி ஓட்டுநரின் சந்தேக மரணம் குறித்த செய்தி வெளியான ஒரு மணி நேரத்திற்குள்ளேயே வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதும், செக்கானூரணி காவல் நிலைய ஆய்வாளர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டதும் பல்வேறு கேள்விகளை எழுப்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement
மேலும், காவல் நிலையங்களுக்கு புகார் அளிக்கச் செல்லும் பொதுமக்களிடம் அவமரியாதையாகப் பேசுவது, இழிவாக நடத்துவது, மிரட்டுவது, ஆளுங்கட்சிக்கு ஆதரவாகச் செயல்பட வற்புறுத்துவது, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவது போன்ற செயல்களில் சில காவலர்கள் ஈடுபடுவதாகக் குற்றம்சாட்டியுள்ளார். இதனால் ஒட்டுமொத்தக் காவல்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையும் பாதிக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். எனவே, செக்கானூரணி காவல் நிலையத்தில் நிகழ்ந்துள்ள சந்தேக மரணம் குறித்து விரிவான, பாரபட்சமற்ற விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். அதேபோல், புகார் அளிக்க வருபவர்கள் மற்றும் விசாரணைக்காக அழைத்து வரப்படுபவர்கள் என அனைவரிடமும் மனிதநேயத்துடனும் கண்ணியத்துடனும் நடந்துகொள்ள வேண்டும் என்று காவல்துறையினருக்கு உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்குமாறு முதலமைச்சரையும் கேட்டுக்கொண்டுள்ளார். இவ்வாறு டிடிவி தினகரன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,140
🥈 Silver ₹205.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு