Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
புதன் | 07 அக்டோபர் 2026 | 21 புரட்டாசி பராபவ வருடம்

காவல் துணைக் கண்காணிப்பாளர்களின் பயிற்சி நிறைவு விழா: முதல்-அமைச்சர் விஜய் பதக்கங்கள் வழங்கினார்

காவல் துணைக் கண்காணிப்பாளர்களின் பயிற்சி நிறைவு விழா: முதல்-அமைச்சர் விஜய் பதக்கங்கள் வழங்கினார்

செங்கல்பட்டு மாவட்டம் ஊனமாஞ்சேரியில் அமைந்துள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் 14-வது காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் (டிஎஸ்பி) பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்-அமைச்சர் விஜய், பயிற்சி முடித்த காவல் துணைக் கண்காணிப்பாளர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். 2025-ம் ஆண்டு பேட்சைச் சேர்ந்த 25 டிஎஸ்பிக்கள் தங்களது பயிற்சியை நிறைவு செய்து காவல்துறையில் பணியில் இணைகின்றனர்.

Advertisement
இவர்களில் 11 பேர் பெண் டிஎஸ்பிக்கள், 14 பேர் ஆண் டிஎஸ்பிக்கள் ஆவர். பயிற்சியை நிறைவு செய்த டிஎஸ்பிக்களுக்கு முதல்-அமைச்சர் விஜய் கோப்பைகள் மற்றும் பதக்கங்களை வழங்கி கௌரவித்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,675
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு