Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
ஞாயிறு | 06 செப்டம்பர் 2026 | 21 ஆவணி பராபவ வருடம்

காவல்துறையின் வீரமும் தியாகமும் என்றும் மறக்க முடியாது; முதல்-அமைச்சர் விஜய் காவலர் தின வாழ்த்து

காவல்துறையின் வீரமும் தியாகமும் என்றும் மறக்க முடியாது; முதல்-அமைச்சர் விஜய் காவலர் தின வாழ்த்து

காவலர் தினத்தை முன்னிட்டு, காவல்துறையினர் அனைவருக்கும் முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:1859-ஆம் ஆண்டு மெட்ராஸ் மாவட்டக் காவல் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் நவீன மற்றும் அமைப்புமுறை சார்ந்த காவல்துறை உருவாக்கப்பட்ட நாளை நினைவுகூரும் வகையில் காவலர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாளில், சமூகத்தில் அமைதியை நிலைநாட்டவும், சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்யவும் தன்னலமின்றி பணியாற்றி வரும் காவல்துறையினர் அனைவருக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் குற்றங்களைத் தடுப்பது, சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பது மட்டுமின்றி, ஆபத்தான சூழ்நிலைகள் மற்றும் பேரிடர் காலங்களிலும் மக்களின் உயிர், உடைமைகள் மற்றும் உரிமைகளை காக்க காவல்துறையினர் துணிச்சலுடன் களத்தில் பணியாற்றி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
அவர்களின் வீரமும் தியாகமும் என்றும் போற்றுதலுக்குரியது என்றும் தெரிவித்துள்ளார்.மேலும், காவல்துறையினரின் பணிச்சுமையை குறைப்பதுடன், நவீன தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி அவர்களின் பணித்திறனை மேம்படுத்தவும் அரசு முன்னுரிமை அளிக்கும் என விஜய் தெரிவித்துள்ளார். காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் தேவைகளை கருத்தில் கொண்டு, தேவையான நலத்திட்டங்களை உறுதி செய்வதற்கும் அரசு முக்கியத்துவம் அளிக்கும் என அவர் கூறியுள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு