Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
செவ்வாய் | 22 செப்டம்பர் 2026 | 6 புரட்டாசி பராபவ வருடம்

காலை உணவு திட்டம் விரிவாக்கம்: பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்திய முதல்வர் விஜய்

காலை உணவு திட்டம் விரிவாக்கம்: பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்திய முதல்வர் விஜய்

தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்து மற்றும் கல்வி சார்ந்த தேவைகளை கருத்தில் கொண்டு காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2022-ஆம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், பின்னர் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. தற்போது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை செயல்படுத்தப்பட்டு வரும் இந்தத் திட்டம், 6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி கூடுதலாக சுமார் 15.30 லட்சம் மாணவ, மாணவிகள் பயன்பெற உள்ளனர். இதற்காக நடப்பு நிதியாண்டில் ரூ.217.63 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பின்னர், இத்திட்டம் “பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்” என்ற பெயரில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான விரிவாக்கம் செப்டம்பர் 22-ஆம் தேதி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. முன்னதாக செப்டம்பர் 17-ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், முதல்வர் விஜய் லண்டன் சென்றிருந்ததால் தொடக்க நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி, சென்னை திருவான்மியூர் காந்திகிராமத்தில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் விஜய், பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தின் விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார்.

Advertisement
மாணவர்களுக்கு காலை உணவு பரிமாறிய அவர், அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். முதல் நாள் உணவில் சாம்பார், வெண்பொங்கல் மற்றும் சர்க்கரைப் பொங்கல் இடம்பெற்றிருந்தன. விரிவாக்கத்துக்குப் பிறகு, மொத்தம் 44,984 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 34 லட்சத்து 64 ஆயிரம் மாணவ, மாணவிகள் காலை உணவுத் திட்டத்தின் மூலம் பயன்பெறுவார்கள். இதற்காக கூடுதலாக ரூ.217.63 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் சட்டமன்ற இடைத்தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், அந்த இரு மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் இந்த விரிவாக்கப்பட்ட திட்டம் இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. திட்டத்தின் உணவுப் பட்டியலில் திங்கட்கிழமை உப்புமா, செவ்வாய்க்கிழமை கிச்சடி, புதன்கிழமை பொங்கல், வியாழக்கிழமை உப்புமா, வெள்ளிக்கிழமை இனிப்பு வகை உணவு ஆகியவை இடம்பெற்றுள்ளன. மேலும், காலை உணவு தயாரிக்கும் சமையல் கூடங்கள் மற்றும் உணவு பரிமாறும் இடங்கள் தூய்மையாகவும் சுகாதாரமான முறையிலும் பராமரிக்கப்பட வேண்டும் என முதல்வர் விஜய் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். மாணவர்களுக்கு சூடான, சுவையான, உரிய அளவில் ஊட்டச்சத்து நிறைந்த உணவு கிடைப்பதை தொடர்ந்து கண்காணிக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,270
🥈 Silver ₹260.00
Petrol ₹108.50
🛢️ Diesel ₹100.30
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு