Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வெள்ளி | 25 செப்டம்பர் 2026 | 9 புரட்டாசி பராபவ வருடம்

காலாவதியான பாலில் அண்ணாமலையாருக்கு அபிஷேகம்: கடைக்கு ரூ.10,000 அபராதம்

காலாவதியான பாலில் அண்ணாமலையாருக்கு அபிஷேகம்: கடைக்கு ரூ.10,000 அபராதம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் காலாவதியான பால் பாக்கெட்டுகளைப் பயன்படுத்தி சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்ட சம்பவம் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலையில் உள்ள உலகப் புகழ்பெற்ற அண்ணாமலையார் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், நேற்று (வியாழக்கிழமை) மாலை நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டின்போது பெரிய நந்தி பகவான் மற்றும் மூலவருக்கு அபிஷேகம் செய்வதற்காக பக்தர்கள் பால் பாக்கெட்டுகளை வாங்கி கோவில் பணியாளர்களிடம் வழங்கியுள்ளனர். அந்தப் பால் பாக்கெட்டுகளைக் கொண்டு அபிஷேகமும் நடைபெற்றுள்ளது. பின்னர், பயன்படுத்தப்பட்ட பால் பாக்கெட்டுகள் கடந்த 8-ந்தேதியே காலாவதியானவை என்பது தெரியவந்தது. காலாவதி தேதியை சரிபார்க்காமல் பாலை அபிஷேகத்திற்கு பயன்படுத்திய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவல் அறிந்த உணவுப் பாதுகாப்புத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கோவிலில் உடனடியாக ஆய்வு மேற்கொண்டனர்.

Advertisement
கோவில் வளாகம் மட்டுமின்றி, அதைச் சுற்றியுள்ள கடைகளிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, கிழக்கு ராஜகோபுரம் அருகே உள்ள ஒரு கடையில் காலாவதியான பால் பாக்கெட்டுகள் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்தக் கடையின் உரிமையாளருக்கு உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ரூ.10,000 அபராதம் விதித்தனர். மேலும், இனி பக்தர்கள் கொண்டு வரும் பால் பாக்கெட்டுகளையும், அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படும் பாலையும் அதன் காலாவதி தேதியை முழுமையாகச் சரிபார்த்த பிறகே பயன்படுத்த வேண்டும் என கோவில் நிர்வாகத்தினருக்கும், கடைக்காரர்களுக்கும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அண்ணாமலையாருக்கு அபிஷேகம் செய்யப்படும் பாலை பக்தர்கள் பின்னர் தீர்த்தமாகப் பருகும் வழக்கம் இருப்பதால், காலாவதியான பாலை பயன்படுத்தியிருப்பது அவர்களின் உடல்நலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என பக்தர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,010
🥈 Silver ₹250.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு