Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
செவ்வாய் | 06 அக்டோபர் 2026 | 20 புரட்டாசி பராபவ வருடம்

கோவில்பட்டியில் மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் உயிரிழப்பு

கோவில்பட்டியில் மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வீட்டின் முன்பு நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த 6-ம் வகுப்பு மாணவன், மின்சாரம் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் 9-வது தெருவைச் சேர்ந்த இசக்கிமுத்துவின் மகன் மணிகண்டன் (11). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.

சம்பவத்தன்று மணிகண்டன் தனது நண்பர்களுடன் ஒரு வீட்டின் முன்புறம் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டின் முன்சுவரை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த எர்த் பைப்பை அவர் எதிர்பாராதவிதமாக தொட்டதாக கூறப்படுகிறது. அந்த பைப்பில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக மணிகண்டனை மின்சாரம் தாக்கியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு மயங்கி கீழே விழுந்தார்.

Advertisement

இதனை பார்த்த பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர் உடனடியாக மணிகண்டனை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மணிகண்டன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,675
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு