தமிழ் தொலைக்காட்சியில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றாக ‘பிக்பாஸ் தமிழ்’ திகழ்கிறது. கடந்த 7 சீசன்களையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், அவர் 7-வது சீசனுடன் நிகழ்ச்சியில் இருந்து விலகினார். இதையடுத்து 8 மற்றும் 9-வது சீசன்களை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார்.இந்நிலையில், ‘பிக்பாஸ் தமிழ்’ நிகழ்ச்சி தற்போது 10-வது சீசனை நோக்கி நகர்கிறது. புதிய போட்டியாளர்கள், எதிர்பாராத திருப்பங்கள், உணர்ச்சிகரமான தருணங்கள் மற்றும் மோதல்கள் என இந்த சீசனும் பல்வேறு அம்சங்களுடன் உருவாக உள்ளது.பிக்பாஸ் தமிழ் சீசன் 10-ன் பிரம்மாண்ட தொடக்க நிகழ்ச்சி செப்டம்பர் 6-ம் தேதி மாலை 6 மணி முதல் நேரடியாக ஒளிபரப்பாக உள்ளது. ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி, ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது.இதனிடையே, இந்த சீசனில் யார் யார் போட்டியாளர்களாக பங்கேற்க உள்ளனர் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
Advertisement
அந்த வகையில், ஆடை வடிவமைப்பாளரும் மாதம்பட்டி ரங்கராஜின் மனைவியுமான ஜாய் கிரிசில்டா பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகின.இதற்கு தற்போது ஜாய் கிரிசில்டா விளக்கம் அளித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் பங்கேற்கவில்லை என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளார். தனது குழந்தை ராகா இன்னும் மிகவும் சிறியவனாக இருப்பதால், அவனை விட்டுவிட்டு பிக்பாஸ் வீட்டிற்குச் செல்வது தனக்கு சரியாகத் தோன்றவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க கிடைத்த வாய்ப்பை தான் நிராகரித்ததாகவும், தனது குழந்தைக்கே தற்போது முன்னுரிமை அளிப்பதாகவும் ஜாய் கிரிசில்டா கூறியுள்ளார்.