Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
செவ்வாய் | 06 அக்டோபர் 2026 | 20 புரட்டாசி பராபவ வருடம்

குலசை முத்தாரம்மன் கோவிலில் அமைச்சர்கள் ரமேஷ், ஸ்ரீநாத் சாமி தரிசனம்

குலசை முத்தாரம்மன் கோவிலில் அமைச்சர்கள் ரமேஷ், ஸ்ரீநாத் சாமி தரிசனம்

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற முத்தாரம்மன் கோவிலில் அமைச்சர்கள் ரமேஷ் மற்றும் ஸ்ரீநாத் ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர். மேலும், தசரா திருவிழாவிற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடுகளையும் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். குலசேகரன்பட்டினத்தில் ஞானமூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலகப் புகழ்பெற்றதாகும். இந்த ஆண்டுக்கான திருவிழா வரும் 11-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான மகிஷாசுர சம்ஹாரம் வரும் 20-ம் தேதி இரவு குலசை சிதம்பரேஸ்வரர் கோவில் கடற்கரையில் நடைபெறவுள்ளது.

Advertisement
திருவிழா தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பக்தர்களுக்கான ஏற்பாடுகள் உள்ளிட்ட பணிகளை அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சூழலில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மற்றும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் ஆகியோர் இன்று முத்தாரம்மன் கோவிலுக்குச் சென்று அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து, தசரா திருவிழாவை முன்னிட்டு நடைபெற்று வரும் ஏற்பாட்டுப் பணிகளையும் ஆய்வு செய்தனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,675
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு