Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 14 நவம்பர் 2026 | 28 ஐப்பசி பராபவ வருடம்

கர்ப்பகால புகைப்படத்தை வெளியிட்ட நடிகை சமந்தா

கர்ப்பகால புகைப்படத்தை வெளியிட்ட நடிகை சமந்தா

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களில் நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். இவர் இயக்குநர் ராஜ் நிடிமோருவை கடந்த 2025-ம் ஆண்டு டிசம்பர் 1-ந்தேதி கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து, அண்மையில் இருவரும் குடும்பத்தினர் முன்னிலையில் பாரம்பரிய முறைப்படி சீமந்தம் நிகழ்ச்சியையும் நடத்தினர். கடந்த ஜூன் மாதம் 'மா இன்டி பங்காரம்' திரைப்படத்தின் வெற்றி விழாவில் பங்கேற்ற சமந்தா, தனது கர்ப்பம் குறித்த மகிழ்ச்சியான தகவலை ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்டார். குழந்தை பிறப்பை முன்னிட்டு, ஏற்கெனவே ஒப்புக்கொண்ட படப்பிடிப்பு மற்றும் பணிகளை நிறைவு செய்துவிட்டு சிறிது காலம் சினிமாவில் இருந்து ஓய்வெடுக்கப் போவதாகவும், அதன்பிறகு மீண்டும் நடிப்புக்குத் திரும்புவதாகவும் அவர் கூறியிருந்தார். இந்த நிலையில், தனது கர்ப்பகாலத்தை நினைவுகூரும் வகையில் சமந்தா வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

Advertisement
பொதுவாக நடிகைகள் கர்ப்பகால நினைவுகளைப் பதிவு செய்யும் வகையில் பிரத்யேக உடைகள், அலங்காரங்களுடன் பிரம்மாண்டமான மகப்பேறு போட்டோஷூட் நடத்துவது வழக்கம். ஆனால், சமந்தா மிகவும் எளிமையான முறையில் தனது புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். சோபாவில் இயல்பாக அமர்ந்தபடி, வயிற்றின் மீது கைகளை வைத்துக்கொண்டு அவர் போஸ் கொடுத்துள்ளார். சிவப்பு நிற மேலாடை, வெள்ளை நிற பேண்ட் மற்றும் கருப்பு நிறக் கண்ணாடி அணிந்துள்ள சமந்தா, அந்தப் புகைப்படத்துடன், 'இதையே எனது மகப்பேறு போட்டோஷூட்டாக எடுத்துக்கொள்ளுங்கள்' (Consider this my maternity shoot) என்று குறிப்பிட்டுள்ளார். சமந்தாவின் இந்த வித்தியாசமான பதிவு ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. வழக்கமான ஆடம்பரமான போட்டோஷூட்டைத் தவிர்த்து, எளிமையாகவும் இயல்பாகவும் புகைப்படத்தைப் பகிர்ந்த அவரது அணுகுமுறையைப் பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும், அவருக்கு வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,140
🥈 Silver ₹205.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு