Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 14 நவம்பர் 2026 | 28 ஐப்பசி பராபவ வருடம்

கரூர்: சாலை சீரமைப்புப் பணிகள் தாமதம் – பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

கரூர்: சாலை சீரமைப்புப் பணிகள் தாமதம் – பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

கரூர் மாவட்டம் சின்ன ஆண்டாங்கோவில் பகுதியில், நீண்ட நாட்களாக சாலை சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படாமல் இருப்பதைக் கண்டித்து அப்பகுதி மக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன ஆண்டாங்கோவில் மேட்டுத் தெருவில், கடந்த பல மாதங்களாக சாலை சீரமைக்கும் பணிகள் நிறைவு செய்யப்படாமல் உள்ளன. பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்காகத் தோண்டப்பட்ட சாலைகள் மீண்டும் சீரமைக்கப்படாததால், தற்போது அப்பகுதி சாலைகள் முழுவதும் குண்டும் குழியுமாக மாறியுள்ளன. இதனால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் மட்டுமின்றி, பள்ளி மாணவர்கள் மற்றும் வாகன ஓட்டிகளும் தினசரி பயணத்தின்போதுபெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கோடை காலத்தில் சாலையில் புழுதி அதிகமாக எழுவதுடன், மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக மாறுகிறது. இதன் காரணமாக அடிக்கடி விபத்துகளும் நிகழ்ந்து வருகின்றன.

Advertisement
இந்தப் பிரச்சினை தொடர்பாக மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. தொடர் அலட்சியத்தால் அதிருப்தியடைந்த அப்பகுதியைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் ஒன்றிணைந்து, இன்று (வியாழக்கிழமை) சின்ன ஆண்டாங்கோவில் மேட்டுத் தெருவில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரும் மாநகராட்சி அதிகாரிகளும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சாலை சீரமைப்புப் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து அதிகாரிகளின் உறுதிமொழியை ஏற்ற பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,140
🥈 Silver ₹205.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு