Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
திங்கள் | 21 செப்டம்பர் 2026 | 5 புரட்டாசி பராபவ வருடம்

கேரளாவில் அடுத்த 4 நாட்களாக கனமழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

கேரளாவில் அடுத்த 4 நாட்களாக கனமழை பெய்யும்:  இந்திய வானிலை ஆய்வு மையம்

கேரளாவில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இன்றும் நாளையும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, மாநிலத்தின் 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மஞ்சள் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் 64 மில்லிமீட்டர் முதல் 115 மில்லிமீட்டர் வரை மழை பதிவாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
இதற்கிடையே, கேரளாவில் இந்த ஆண்டு ஜூன் 1-ந்தேதி முதல் செப்டம்பர் 17-ந்தேதி வரையிலான காலகட்டத்தில் வழக்கத்தைவிட மழைப்பொழிவு குறைந்துள்ளது. இந்த காலகட்டத்தில் 28 சதவீதம் அளவுக்கு மழை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை குறைந்ததன் காரணமாக கடந்த 2 மாதங்களாக வெப்பநிலை அதிகரித்ததுடன், மின் நுகர்வும் உயர்ந்துள்ளது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,285
🥈 Silver ₹260.00
Petrol ₹107.77
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு