Skip to main content
🌤️ —°C
வியாழன் | 30 ஜூலை 2026 | 14 ஆடி பராபவ வருடம்

கேரளம்: ஓணம் பரிசு பொருட்கள் ஆகஸ்டு 10 முதல் விநியோகம்; மந்திரி அறிவிப்பு

கேரளம்:  ஓணம் பரிசு பொருட்கள் ஆகஸ்டு 10 முதல் விநியோகம்; மந்திரி அறிவிப்பு
கேரளத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் பரிசுப் பொருட்கள், ஆகஸ்ட் 10 முதல் ரேஷன் அட்டைதாரர்களுக்கு விநியோகிக்கப்படும் என்று மாநில உணவு மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் துறை மந்திரி அனூப் ஜேக்கப் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு ஓணம் பண்டிகை ஆகஸ்ட் 26-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், பொதுமக்களுக்கு ஓணம் பரிசுத் தொகுப்பு வழங்க மாநில அரசு ஏற்பாடுகளை செய்துள்ளது. இதுகுறித்து மந்திரி அனூப் ஜேக்கப் கூறுகையில், காங்கிரஸ் அரசு பொறுப்பேற்ற பிறகு புதிதாக 73,024 ரேஷன் அட்டைகள் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஓணம் பரிசுப் பொருட்கள் வழங்கும் திட்டத்தை முதல்-மந்திரி வி.டி.
Advertisement
சதீசன் தொடங்கி வைக்க உள்ளார். இந்தத் திட்டத்திற்காக அரசு முன்கூட்டியே 1.65 லட்சம் டன் அரிசியும், 24,506 டன் கோதுமையும் ஒதுக்கியுள்ளது.புதிய பயனாளிகளுக்கு ஆகஸ்ட் 3 முதல் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட உள்ளன. ஏற்கனவே உள்ள பிற ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆகஸ்ட் 10 முதல் விநியோகம் தொடங்கும் என்று மந்திரி தெரிவித்தார்.ஒவ்வொரு பயனாளிக்கும் துணிப்பை உள்ளிட்ட மொத்தம் 16 பொருட்கள், ரூ.854 மதிப்பில் வழங்கப்பட உள்ளன. இந்தத் திட்டத்தை செயல்படுத்த ரூ.53 கோடி நிதியை அரசு ஒதுக்கியுள்ளது.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு