Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
புதன் | 07 அக்டோபர் 2026 | 21 புரட்டாசி பராபவ வருடம்

கருங்கடலில் 23 இந்திய சிப்பந்திகளுடன் சென்ற எண்ணெய் கப்பல் மீது டிரோன் தாக்குதல்

கருங்கடலில்  23 இந்திய சிப்பந்திகளுடன் சென்ற எண்ணெய் கப்பல் மீது டிரோன் தாக்குதல்

ரஷ்யாவின் கருங்கடல் பகுதியில், சோச்சி கடற்கரைக்கு அருகே பயணித்த லைபீரியா நாட்டுக் கொடியுடன் கூடிய எண்ணெய் கப்பல் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. தாக்குதலைத் தொடர்ந்து கப்பலில் இருந்த கச்சா எண்ணெய் தீப்பிடித்து, அங்கு கடும் தீ விபத்து ஏற்பட்டது. அஃப்ராமேக்ஸ் ரியோ எனப்படும் அந்த எண்ணெய் கப்பலில் 23 இந்திய சிப்பந்திகள் பணியாற்றி வந்தனர். டிரோன் தாக்குதல் நடைபெற்றதைத் தொடர்ந்து கப்பலில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும், இந்த சம்பவத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஷ்ய அதிகாரிகள் கூறிய தகவலின்படி, டிரோன் தாக்குதலுக்குப் பிறகு கப்பலில் இருந்த கச்சா எண்ணெய் தீப்பற்றி எரியத் தொடங்கியது.

Advertisement
தீவிபத்து தீவிரமாக இருந்ததால், தீயணைப்பு வீரர்களால் கப்பலுக்கு அருகில் சென்று தீயை அணைக்கும் பணியில் உடனடியாக ஈடுபட முடியவில்லை. சோச்சி கடற்கரைப் பகுதியில் இருந்து பார்க்கும்போது, கப்பலில் இருந்து மிகப்பெரிய அளவில் தீப்பிழம்புகள் எழுந்ததுடன், அடர்த்தியான கரும்புகையும் வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அப்பகுதியில் உள்ள கடற்கரைகளுக்குச் செல்வதற்கு பொதுமக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ரஷ்யா-உக்ரைன் போர் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், கருங்கடல் பகுதியில் வர்த்தகக் கப்பல்கள் குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் அதிகரித்து வருவது சர்வதேச அளவில் கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,675
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு