திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்று வரும் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு, வரும் 15-ம் தேதி திருச்செந்தூர் – நெல்லை இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த ரெயில்கள் நின்று செல்லும் நிலையங்கள் குறித்த விவரங்களை தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ளது. கந்த சஷ்டி விழா கடந்த முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் 15-ம் தேதி மாலை நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் பயண வசதியைக் கருத்தில் கொண்டு, அன்றைய தினம் இரண்டு சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே இயக்குகிறது. சிறப்பு ரெயில்களின் நேர அட்டவணை: - ரெயில் எண் 06001: நவம்பர் 15-ம் தேதி மதியம் 3.20 மணிக்கு நெல்லை சந்திப்பில் இருந்து புறப்பட்டு, மாலை 5 மணிக்கு திருச்செந்தூரைச் சென்றடையும்.
Advertisement
- ரெயில் எண் 06002: திருச்செந்தூரில் இருந்து இரவு 7.30 மணிக்குப் புறப்பட்டு, இரவு 8.50 மணிக்கு நெல்லை சந்திப்பை அடையும்.- ரெயில் எண் 06004: திருச்செந்தூரில் இருந்து இரவு 9.30 மணிக்குப் புறப்பட்டு, 10.45 மணிக்கு நெல்லை சந்திப்பைச் சென்றடையும். - ரெயில் எண் 06003: நெல்லை சந்திப்பில் இருந்து இரவு 11.30 மணிக்குப் புறப்பட்டு, நள்ளிரவு 12.45 மணிக்கு திருச்செந்தூரை அடையும். நின்று செல்லும் ரெயில் நிலையங்கள்: இந்தச் சிறப்பு ரெயில்கள் ஆறுமுகநேரி, நாசரேத், ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூர், பாளையங்கோட்டை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். ஒவ்வொரு சிறப்பு ரெயிலும் 10 பொதுப் பெட்டிகள் மற்றும் 2 சரக்கு பெட்டிகளுடன் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.