Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வெள்ளி | 25 செப்டம்பர் 2026 | 9 புரட்டாசி பராபவ வருடம்

கட்டுக்கட்டாக பணம்... கழுத்து நிறைய நகை: ரீல்ஸ் வெளியிட்ட பெண் யூடியூபர் வீட்டில் ரூ.1 கோடி கொள்ளை

கட்டுக்கட்டாக பணம்... கழுத்து நிறைய நகை: ரீல்ஸ் வெளியிட்ட பெண் யூடியூபர் வீட்டில் ரூ.1 கோடி கொள்ளை

நாகர்கோவில் அருகே, சமூக வலைதளங்களில் தங்க நகைகள் மற்றும் கட்டுக்கட்டாக பணத்தை காட்டி ரீல்ஸ் வெளியிட்டு வந்த பெண் யூடியூபர் வீட்டில் சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவில் மாவட்டம் தம்மத்துக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார் (36). ஏலக்காய் மொத்த வியாபாரம் உள்ளிட்ட தொழில்களை செய்து வருகிறார். இவரது மனைவி மதுமிதா (29), யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார். மதுமிதா தான் புதிதாக வாங்கும் தங்க நகைகள், வீட்டில் வைத்திருக்கும் பணம், குடும்பத்தினரின் பயணங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை சமூக வலைதளங்களில் ரீல்ஸ் மூலம் பகிர்ந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், ஏராளமான நகைகளை அணிந்தபடியும், மெத்தையில் கட்டுக்கட்டாக பணத்தை பரப்பி வைத்தபடியும் நடனமாடும் வீடியோக்களையும் அவர் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோக்களை கொள்ளையர்கள் தொடர்ந்து கவனித்து வந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில், குடும்பத்தினர் வெளியே சென்றிருந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்ட கொள்ளையர்கள், வீட்டின் பின்பக்க கதவு பூட்டை கட்டிங் மெஷின் மூலம் அறுத்து வீட்டுக்குள் நுழைந்துள்ளனர்.

Advertisement
பின்னர் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 120 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகள், ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ.1 கோடி என கூறப்படுகிறது. வெளியே சென்றிருந்த தம்பதி வீடு திரும்பியபோது நகைகள் மற்றும் பணம் திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்களை பிடிக்க 3 தனிப்படைகளை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். சமூக வலைதளங்களில் மதுமிதா வெளியிட்ட பதிவுகளை கண்காணித்த பின்னரே கொள்ளையர்கள் வீட்டை குறிவைத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மதுமிதா வெளியிட்ட ரீல்ஸ் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்ட நிலையில் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. தங்களது தனிப்பட்ட விவரங்கள், பணம் மற்றும் நகைகள் தொடர்பான தகவல்களை சமூக வலைதளங்களில் வெளிப்படையாக பகிர்வதில் உள்ள ஆபத்துகளை இந்த சம்பவம் உணர்த்துவதாக அமைந்துள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,010
🥈 Silver ₹250.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு