Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 14 நவம்பர் 2026 | 28 ஐப்பசி பராபவ வருடம்

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் முருங்கைக்காய் விலை கிடுகிடு உயர்வு

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் முருங்கைக்காய் விலை கிடுகிடு உயர்வு

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மொத்த விற்பனை சந்தையில் முருங்கைக்காயின் விலை இன்று அதிரடியாக அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ள நிலையில், பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர். ஒட்டன்சத்திரம் தாராபுரம் சாலையில் அமைந்துள்ள காந்தி காய்கறி மொத்த விற்பனை சந்தைக்கு திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இந்த சந்தையில் தினந்தோறும் மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை முருங்கைக்காய் உள்ளிட்ட காய்கறிகளுக்கான ஏலம் நடைபெறுகிறது. இந்நிலையில், சந்தைக்கு முருங்கைக்காய் வரத்து குறைந்ததுடன், வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த வியாபாரிகளின் தேவை அதிகரித்துள்ளது.

Advertisement
இதன் காரணமாக இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஏலத்தில் முருங்கைக்காய் விலை கணிசமாக உயர்ந்தது இன்றைய மொத்த விற்பனை விலை (ஒரு கிலோ): - நாசிக் முருங்கைக்காய் – ரூ.191 முருங்கைக்காயின் விலை உயர்ந்திருப்பது சாகுபடி செய்த விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளையில், இந்த விலை உயர்வு சில்லறை விற்பனைக் கடைகளிலும் எதிரொலித்து, முருங்கைக்காய் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால் பொதுமக்களும் இல்லத்தரசிகளும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,140
🥈 Silver ₹205.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு