Skip to main content
🌤️ —°C
வெள்ளி | 21 ஆகஸ்ட் 2026 | 5 ஆவணி பராபவ வருடம்

எம்.எல்.ஏ.க்களுக்கான கார்களை தேர்வு செய்ய நடவடிக்கை

எம்.எல்.ஏ.க்களுக்கான கார்களை தேர்வு செய்ய நடவடிக்கை
தமிழக சட்டசபையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ. ஜோதிமணி, பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் நேர்மையாக பணியாற்றுவதற்கு ஏதுவாக, அவர்களுக்கு அரசு சார்பில் கார் மற்றும் உதவியாளர் வசதி வழங்க வேண்டும் என்று சமீபத்தில் கோரிக்கை விடுத்தார்.இந்த கோரிக்கையை முதல்-அமைச்சர் விஜய் உடனடியாக ஏற்றுக்கொண்டு, சட்டசபையிலேயே அதற்கான அறிவிப்பை வெளியிட்டார். இதையடுத்து, மறுநாளே மஹிந்திரா நிறுவனத்தின் 6 வகையான கார்கள் தலைமைச் செயலகத்திற்கு கொண்டு வரப்பட்டன. இவற்றின் விலை குறைந்தபட்சம் ரூ.9 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.26.18 லட்சம் வரை உள்ளது.மஹிந்திராவின் XUV 7XO, XUV 3XO, Scorpio-N, Scorpio Classic, Bolero மற்றும் Bolero Neo ஆகிய எஸ்.யு.வி.
Advertisement
ரக கார்கள் தலைமைச் செயலக வளாகத்தில் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளன இந்த கார்களின் மைலேஜ், சொகுசு வசதிகள், பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் நீண்ட தூர பயணங்களில் அவற்றின் நம்பகத்தன்மை உள்ளிட்டவை குறித்து தலைமைச் செயலக அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், கார்களை டெஸ்ட் டிரைவ் செய்தும் வருகின்றனர்.6 மாடல்களில் எது எம்.எல்.ஏ.க்களுக்கு பொருத்தமானதாக இருக்கும் என்பது ஆய்வுக்குப் பின்னர் இறுதி செய்யப்படும் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு