Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
செவ்வாய் | 29 செப்டம்பர் 2026 | 13 புரட்டாசி பராபவ வருடம்

உயிரை பணயம் வைத்து கடத்தல்காரர்களை பிடித்த காவலருக்கு முதல்-அமைச்சர் விஜய் நேரில் பாராட்டு

உயிரை பணயம் வைத்து கடத்தல்காரர்களை பிடித்த காவலருக்கு முதல்-அமைச்சர் விஜய் நேரில் பாராட்டு

குட்கா கடத்தலை தடுக்கும்போது தனது உயிரைப் பொருட்படுத்தாமல் செயல்பட்டு கடத்தல்காரர்களை பிடிக்க உதவிய கோவில்பாளையம் காவல் நிலைய தலைமை காவலர் வேல்முருகனை முதல்-அமைச்சர் விஜய் நேரில் அழைத்து பாராட்டினார். கோவை மாவட்டம் விளாங்குறிச்சி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, ஒரு கார் சோதனைக்காக நிற்காமல் சென்றது. இதையடுத்து, அந்த காரை தடுத்து நிறுத்தும் முயற்சியில் கோவில்பாளையம் காவல் நிலைய தலைமை காவலர் வேல்முருகன் காரின் மேற்கூரை மீது ஏறினார். காரின் மீது காவலர் இருப்பது தெரிந்த நிலையிலும், கடத்தல்காரர்கள் வாகனத்தை நிறுத்தாமல் விளாங்குறிச்சியில் இருந்து அவிநாசி வரை சுமார் 40 கிலோமீட்டர் தூரம் ஓட்டிச் சென்றனர்.

Advertisement
பின்னர் போலீசார் அந்த காரை மடக்கிப் பிடித்தனர். சோதனையில் காரில் சுமார் 233 கிலோ குட்கா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், காரில் இருந்த 3 பேரும் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் துணிச்சலுடன் செயல்பட்டு கடத்தல்காரர்களை பிடிக்க உதவிய தலைமை காவலர் ம.வேல்முருகனை முதல்-அமைச்சர் விஜய் இன்று தலைமைச் செயலகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டி பரிசு வழங்கினார். அப்போது, பணியின்போது கவனமாகவும், பாதுகாப்பாகவும் செயல்பட வேண்டும் என்று தலைமை காவலர் வேல்முருகனுக்கு முதல்-அமைச்சர் விஜய் அறிவுறுத்தினார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,640
🥈 Silver ₹240.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு