Skip to main content
🌤️ —°C
வெள்ளி | 14 ஆகஸ்ட் 2026 | 29 ஆடி பராபவ வருடம்

உதயநிதி ஸ்டாலின் கைது எதிரொலி... தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்

உதயநிதி ஸ்டாலின் கைது எதிரொலி... தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்
தஞ்சையில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தின் போது ஆபாசமாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். அந்த வழக்கின் அடிப்படையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலினை போலீசார் தஞ்சைக்கு அழைத்துச் சென்று வருகின்றனர்.இந்த கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் திமுகவினர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
Advertisement
மாநிலத்தின் பல இடங்களில் சாலை மறியல் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருவதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.இதற்கு முன்பாக, உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்படுவதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து, அவரது இல்லம் முன்பு திமுகவினர் திரண்டனர். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை அடுத்து, தமிழகம் முழுவதும் அரசியல் பரபரப்பு அதிகரித்துள்ளது.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு