உக்ரைனில் குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து ரஷியா நடத்திய ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களில் 8 பொதுமக்கள் உயிரிழந்தனர். மேலும் 35-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ரஷியா-உக்ரைன் இடையேயான போர் 4 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், இரு தரப்பிலும் வீரர்கள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். பலரும் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், உக்ரைனின் குடியிருப்பு பகுதிகளில் ரஷியா நடத்திய தாக்குதல்களில் பொதுமக்கள் 8 பேர் பலியாகினர். ஓடெசா மற்றும் சபோரி ஷியா நகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் சேதமடைந்ததில் 35-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுக்கு உள்ளாகினர். இதற்கு பதிலடியாக, ரஷியாவில் உள்ள ரசாயன ஆலைகள் மீது உக்ரைனும் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
இதற்கிடையே, உக்ரைன்-போலந்து எல்லை அருகே உள்ள ரெயில்வே கிராசிங் பகுதியில் ரஷியா டிரோன் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த வழியாக சென்ற ரெயில் ஒன்றை அதிகாரிகள் நிறுத்தினர். அந்த சிறப்பு ரெயிலில் இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், ஜெர்மன் அதிபர் பிரெட்ரிக் மெர்சின் ஆலோசகர் கன்தர் சாவ்டர், சுவீடன் முன்னாள் பிரதமர் கார்ல் பில்ட், ஐரோப்பிய பாதுகாப்பு ஆலோசகர், தூதர்கள் மற்றும் ஜெர்மன் எம்.பி.க்கள் பயணம் செய்து கொண்டிருந்தனர். அதிகாரிகள் ரெயிலை முன்கூட்டியே நிறுத்தியதால், அதில் பயணம் செய்த அனைவரும் டிரோன் தாக்குதலில் இருந்து பாதுகாப்பாக தப்பினர்.