தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பான அளவைவிட அதிகமாக பதிவாக வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார். அவரது கணிப்பின்படி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அக்டோபர் 20-ஆம் தேதி முதல் டிசம்பர் 20-ஆம் தேதி வரை வடகிழக்கு பருவமழை தீவிரமாக இருக்கும். இதில் நவம்பர் மாதத்தில் மழைப்பொழிவு அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலத்தில் சராசரியாக 44 செ.மீ. மழை பெய்வது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு இயல்பைவிட கூடுதலாக மழை பெய்யக்கூடும் என்றும், மொத்த மழையளவு 50 முதல் 60 செ.மீ. வரை பதிவாக வாய்ப்புள்ளதாகவும் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.