Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 14 நவம்பர் 2026 | 28 ஐப்பசி பராபவ வருடம்

இன்று 4 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! எந்தெந்த பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு

இன்று 4 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! எந்தெந்த பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் நவம்பர் 13-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இது வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற வாய்ப்புள்ளது. மேலும், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் சுமார் 1.5 கிலோமீட்டர் உயரத்திலும், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் சுமார் 0.9 கிலோமீட்டர் உயரத்திலும் வளிமண்டல சுழற்சிகள் நிலவி வருகின்றன. இன்றைய வானிலை (11-11-2026): சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இடி, மின்னலுடன் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யலாம். நாளைய வானிலை (12-11-2026): தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசி மிதமான மழை பெய்யக்கூடும். மற்ற தமிழகப் பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. நாளை மறுநாள் (13-11-2026) கோயம்புத்தூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். மற்ற தமிழகப் பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். 14-11-2026: திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.

Advertisement
ஏனைய தமிழக மாவட்டங்களில் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 15-11-2026: தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசுவதுடன் கனமழை பெய்யக்கூடும். ராணிப்பேட்டை, திருச்சிராப்பள்ளி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மற்ற தமிழகப் பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். 16-11-2026: நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளை ஒட்டிய பிற மாவட்டங்களில் சில இடங்களில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யலாம். ஏனைய தமிழகப் பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. வெப்பநிலை நிலவரம்: நவம்பர் 11 முதல் 14-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய அளவிலான மாற்றம் இருக்காது. இருப்பினும், வெப்பநிலை சற்று அதிகரிக்கலாம். இந்த நாட்களில் வெப்பநிலை பொதுவாக இயல்பான அளவிலேயே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையின் வானிலை: இன்று சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 முதல் 33 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 முதல் 26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கலாம். மீனவர்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அரபிக்கடல் பகுதிகளுக்கு தற்போது எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. அதேநேரத்தில், அந்தமான் கடல் பகுதிகளில் நவம்பர் 11 மற்றும் 12-ம் தேதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். நவம்பர் 13-ம் தேதி அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகளிலும், 14-ம் தேதி இந்த கடல் பகுதிகளின் பெரும்பாலான இடங்களிலும் இதே வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளது. எனவே, குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் மீனவர்கள் அந்தந்த கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,140
🥈 Silver ₹205.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு