Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 14 நவம்பர் 2026 | 28 ஐப்பசி பராபவ வருடம்

“ஆல் இஸ் வெல்... நம்பிக்கையுடன் இருங்கள்!” – குழந்தைகள் தின வாழ்த்து அட்டையுடன் கேக் வழங்கிய முதல்வர் விஜய்

“ஆல் இஸ் வெல்... நம்பிக்கையுடன் இருங்கள்!” – குழந்தைகள் தின வாழ்த்து அட்டையுடன் கேக் வழங்கிய முதல்வர் விஜய்

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, சென்னை கொளத்தூரில் உள்ள அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சர் விஜய் கேக் மற்றும் வாழ்த்து அட்டைகளை வழங்கி கொண்டாடினார். நாடு முழுவதும் நாளை (சனிக்கிழமை) குழந்தைகள் தினம் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, பள்ளிகளில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு கூடுதல் சிறப்பாக, தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கேக் வழங்க தமிழக அரசு திட்டமிட்டது. இதற்காக ரூ.9.27 கோடி மதிப்பில் டெண்டர் கோரப்பட்டு, முன்னணி கேக் தயாரிப்பு நிறுவனங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாணவருக்கும் வழங்கப்படும் கேக் 45 கிராம் எடை கொண்டதாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் தொடக்க விழா சென்னை கொளத்தூரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதலமைச்சர் விஜய், மாணவர்களுக்கு கேக் வழங்கி திட்டத்தைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, குழந்தைகள் தின வாழ்த்து அட்டைகளையும் வழங்கியதுடன், மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

Advertisement
இதனைத் தொடர்ந்து கொளத்தூர் தொகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் வழங்க உள்ளார். அந்தத் தொகுதியின் தவெக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், அங்கு நடைபெறவுள்ள நலத்திட்டப் பணிகளை முதலமைச்சரே தொடங்கி வைக்கிறார். அவரது வருகையை முன்னிட்டு அப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கொளத்தூரில் திட்டம் தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு கேக் விநியோகம் நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் மொத்தம் 61 லட்சத்து 84 ஆயிரத்து 566 கேக் துண்டுகள் வழங்கப்படுகின்றன. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் சுமார் 2.90 லட்சம் மாணவர்களுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டைகள் வழங்கப்படுகின்றன. மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வாழ்த்து அட்டைகளில், “இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்”, “All is well”, “Confident-ஆ இருங்க” என்ற வாசகங்களுடன், இறுதியில் “பிரியமுடன் விஜய்” என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,140
🥈 Silver ₹205.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு