Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
சனி | 05 செப்டம்பர் 2026 | 20 ஆவணி பராபவ வருடம்

ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மாணவர்களின் எதிர்காலத்தை ஒளிமயமாக்கட்டும்: முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து

ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மாணவர்களின் எதிர்காலத்தை ஒளிமயமாக்கட்டும்: முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான செப்டம்பர் 5-ம் தேதி, ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, ஆசிரியர் தினத்தை முன்னிட்டு முதல்-அமைச்சர் விஜய் ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடும் இந்த சிறப்பான நாளில், மாணவர்களின் வளமான எதிர்காலத்துக்காக தன்னலமின்றி உழைத்து வரும் அனைத்து ஆசிரியர்களுக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.மாணவர்களிடையே அறிவை வளர்ப்பதுடன், ஒழுக்கம், மனிதநேயம், சகோதரத்துவம், சமூகப் பொறுப்பு போன்ற உயர்ந்த பண்புகளையும் ஆசிரியர்கள் உருவாக்குகின்றனர்.

Advertisement
மேலும், மாணவர்களின் கனவுகளுக்கு ஊக்கமளித்து, அவர்களின் திறமைகளை சரியான பாதையில் வழிநடத்தி, எதிர்கால வாழ்க்கைக்கான வலுவான அடித்தளத்தையும் அமைத்துத் தருகின்றனர்.நாட்டின் வளர்ச்சிக்கும், ஒட்டுமொத்த சமூக முன்னேற்றத்துக்கும் முக்கிய பங்காற்றி வரும் ஆசிரியர்களின்உயரியபணியைஅனைவரும்போற்றவேண்டும்என்றும்அவரகுறிப்பிட்டுள்ளார்ஆசிரியர்களின் தன்னலமற்ற சேவையும் சிறப்பான வழிகாட்டுதலும் மாணவர்களின் எதிர்காலத்தை மேலும் சிறப்பானதாகவும் ஒளிமயமானதாகவும் மாற்றட்டும் என முதல்-அமைச்சர் விஜய் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு