Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
செவ்வாய் | 22 செப்டம்பர் 2026 | 6 புரட்டாசி பராபவ வருடம்

ஆசிய விளையாட்டு பெண்கள் கிரிக்கெட்: தங்கம் வென்ற இந்தியா

ஆசிய விளையாட்டு பெண்கள் கிரிக்கெட்: தங்கம் வென்ற இந்தியா

20-வது ஆசிய விளையாட்டு போட்டியின் பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இலங்கை அணியை 147 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றது. இந்தியா-இலங்கை அணிகள் மோதிய இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷபாலி வர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு வலுவான தொடக்கத்தை ஏற்படுத்தினர். ஸ்மிருதி மந்தனா 45 பந்துகளில் 79 ரன்கள் விளாசினார். ஷபாலி வர்மா 29 பந்துகளில் 48 ரன்கள் சேர்த்தார். கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 17 பந்துகளில் 19 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து, ரிச்சா கோஷ் அதிரடியாக விளையாடி 22 பந்துகளில் 49 ரன்கள் குவித்தார். அவருடன் பார்த்தி புல்மாலி 7 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 216 ரன்கள் எடுத்தது.

Advertisement
இதையடுத்து 217 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணிக்கு இந்திய பந்துவீச்சாளர்கள் ஆரம்பம் முதலே நெருக்கடி கொடுத்தனர். அந்த அணியின் கேப்டன் சமாரி அதபத்து 21 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார். கவிஷா தில்ஹாரி 13 பந்துகளில் 11 ரன்கள் சேர்த்தார். மற்ற வீராங்கனைகள் பெரிய அளவில் ரன்கள் சேர்க்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் இலங்கை அணி 15.4 ஓவர்களில் 69 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி 147 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. இந்திய அணியின் பந்துவீச்சில் தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஷ்ரேயங்கா பாட்டீல், ஸ்ரீ சரணி மற்றும் ஷபாலி வர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,270
🥈 Silver ₹260.00
Petrol ₹108.50
🛢️ Diesel ₹100.30
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு