ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்திய அணி தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளது. 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிப் பிரிவில் சுருச்சி இந்தர் சிங் மற்றும் கமல்ஜீத் இணைந்த இந்திய அணி தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. இதேபோல், ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் பிரிவிலும் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது. இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர்களின் இந்த சாதனைக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிப் பிரிவில் தங்கம் வென்ற கமல்ஜீத் மற்றும் சுருச்சி இந்தர் சிங்கிற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
Advertisement
துல்லியமான செயல்பாடு மற்றும் சிறப்பான கூட்டணி மூலம் இந்த முக்கியமான வெற்றியை பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், இருவருக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். மற்றொரு பதிவில், துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கத்தை பெற்றுத் தந்த வீரர்களின் சிறப்பான செயல்பாடு மற்றும் கூட்டு முயற்சியை ஜனாதிபதி பாராட்டியுள்ளார். தொடர்ந்து வெற்றிகளைப் பெற தனது நல்வாழ்த்துகளையும் அவர் தெரிவித்துள்ளார்.