Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
புதன் | 23 செப்டம்பர் 2026 | 7 புரட்டாசி பராபவ வருடம்

ஆசிய விளையாட்டில் வரலாறு படைத்த ஜெய் மீனா: சாப்ட் டென்னிஸில் இந்தியாவுக்கு வெண்கலம்

ஆசிய விளையாட்டில் வரலாறு படைத்த ஜெய் மீனா: சாப்ட் டென்னிஸில் இந்தியாவுக்கு வெண்கலம்

ஆசிய விளையாட்டுப் போட்டியின் சாப்ட் டென்னிஸ் பிரிவில் இந்தியாவின் ஜெய் மீனா வெண்கலப் பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்துள்ளார். ஜப்பானின் அய்ச்சி மாகாணத்தில் உள்ள நகோயா நகரில் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா, ஜப்பான், சீனா, தென்கொரியா உள்ளிட்ட 45 நாடுகளைச் சேர்ந்த சுமார் 11 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் இதில் பங்கேற்றுள்ளனர். சாப்ட் டென்னிஸ் பிரிவில் இந்தியா இதுவரை ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்றதில்லை. இந்நிலையில், ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஜெய் மீனா வெண்கலம் வென்று இந்தியாவுக்கு இந்தப் பிரிவில் முதல் பதக்கத்தை பெற்றுத் தந்துள்ளார். அரையிறுதியில் ஜெய் மீனா, ஜப்பான் வீரர் தகுயா குரோசகாவை எதிர்கொண்டார். தொடக்கத்தில் தொடர்ந்து 3 செட்களை இழந்த ஜெய் மீனா, பின்னர் சிறப்பாக விளையாடி 4-வது மற்றும் 5-வது செட்களை கைப்பற்றினார். இதனால் ஆட்டத்தின் நிலை 2-3 என மாறியது.

Advertisement
இருப்பினும், 6-வது செட்டில் குரோசகா 4-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். சாப்ட் டென்னிஸில் அரையிறுதிக்கு தகுதி பெறும் வீரர்களுக்கு பதக்கம் உறுதி என்பதால், காலிறுதியில் வெற்றி பெற்றதன் மூலம் ஜெய் மீனா ஏற்கனவே இந்தியாவுக்கான பதக்கத்தை உறுதி செய்திருந்தார். இதன்மூலம், ஆசிய விளையாட்டுப் போட்டி வரலாற்றில் சாப்ட் டென்னிஸில் இந்தியா தனது முதல் பதக்கத்தை பெற்றுள்ளது. இந்த சாதனையை ஜெய் மீனா நிகழ்த்தியுள்ளார். இந்த வெண்கலப் பதக்கத்துடன் ஆசிய விளையாட்டில் இந்தியாவின் மொத்த பதக்க எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. இதில் துப்பாக்கி சுடுதலில் 7 பதக்கங்களும், கிரிக்கெட்டில் ஒரு தங்கப் பதக்கமும், கலப்பு தற்காப்புக் கலையில் (MMA) சுசிகா தரியால் வென்ற ஒரு வெண்கலப் பதக்கமும் அடங்கும். பதக்கப் பட்டியலில் 60 பதக்கங்களுடன் சீனா முதலிடத்தில் உள்ளது. இந்தியா 8-வது இடத்தில் உள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,135
🥈 Silver ₹255.00
Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு