Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 26 செப்டம்பர் 2026 | 10 புரட்டாசி பராபவ வருடம்

ஆசிய போட்டியில் வெண்கலம்: தமிழக வீரர்களுக்கு முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து

ஆசிய போட்டியில் வெண்கலம்: தமிழக வீரர்களுக்கு முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து

ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் வேலவன் செந்தில்குமார் மற்றும் ஜோஷ்னா சின்னப்பா ஜோடி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது. இருவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், வெண்கலப் பதக்கம் வென்ற ஜோஷ்னா சின்னப்பா மற்றும் வேலவன் செந்தில்குமார் ஆகியோருக்கு முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ஜப்பானில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலம் வென்று இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்த இரு வீரர்களுக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.

Advertisement
மேலும், இவர்களின் சாதனையைப் பாராட்டும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் தலா ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இவர்களின் வெற்றி தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் விளையாட்டு வீரர்களுக்கு புதிய உத்வேகத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தும் என்றும், திறமையான விளையாட்டு வீரர்களுக்கு தமிழ்நாடு அரசு தொடர்ந்து ஆதரவாக இருக்கும் என்றும் முதல்-அமைச்சர் விஜய் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஜோஷ்னா சின்னப்பா மற்றும் வேலவன் செந்தில்குமார் தொடர்ந்து பல்வேறு சாதனைகளை படைக்க வேண்டும் என்றும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,010
🥈 Silver ₹250.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு