Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வியாழன் | 17 செப்டம்பர் 2026 | 1 புரட்டாசி பராபவ வருடம்

அரியலூர் கூட்டுறவு சங்க சில்லறை விற்பனை பால் விலை லிட்டருக்கு ரூ.8 உயர்வு

அரியலூர் கூட்டுறவு சங்க சில்லறை விற்பனை பால் விலை லிட்டருக்கு ரூ.8 உயர்வு

அரியலூர்: மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக சில்லறையில் விற்பனை செய்யப்படும் பாலின் விலை லிட்டருக்கு ரூ.8 உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து, ஒரு லிட்டர் பால் ரூ.46-ல் இருந்து ரூ.54 ஆக அதிகரித்துள்ளது. திடீர் விலை உயர்வு பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு, பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று அண்மையில் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.7 உயர்த்தியது. அரசு அறிவித்த இந்த ரூ.7 ஊக்கத்தொகை, ஆவின் நிறுவனத்துக்கு வழங்கப்படும் பாலுக்கு மட்டுமே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், கூட்டுறவு சங்கங்கள் மூலம் உள்ளூர் நுகர்வோருக்கு நேரடியாக சில்லறை விலையில் விற்பனை செய்யப்படும் பாலுக்கு இந்த ஊக்கத்தொகை கிடைக்கவில்லை.

Advertisement
இதனால், ஏற்கனவே ரூ.46-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு லிட்டர் பாலின் விலை, இன்று (வியாழக்கிழமை) முதல் ரூ.8 உயர்த்தப்பட்டு ரூ.54-க்கு விற்பனை செய்யப்படுவதாக கூட்டுறவு சங்கங்கள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் தினமும் சுமார் ஒரு லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு, திருச்சி, சென்னை உள்ளிட்ட ஆவின் நிலையங்களுக்கு அனுப்பப்படுகிறது. இதனுடன், உள்ளூர் மக்களின் தேவையை பூர்த்தி செய்ய குறிப்பிட்ட அளவு பால் சில்லறை விற்பனையும் செய்யப்பட்டு வருகிறது. தற்போது ஆவின் நிறுவனத்துக்கு அனுப்பப்படாத சில்லறை விற்பனை பாலின் விலை உயர்த்தப்பட்டுள்ளதால், ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களின் அன்றாட செலவில் கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு