Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 17 அக்டோபர் 2026 | 31 புரட்டாசி பராபவ வருடம்

அ.தி.மு.க. 55-வது ஆண்டு விழா: தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

அ.தி.மு.க. 55-வது ஆண்டு விழா: தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

அ.தி.மு.க. தொடங்கப்பட்டு 54 ஆண்டுகள் நிறைவடைந்து, 55-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி, கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொண்டர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதையொட்டி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று அ.தி.மு.க. சார்பில் ஆண்டு விழா கொண்டாட்டங்கள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் பங்கேற்ற எடப்பாடி பழனிசாமி, அங்குள்ள முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, ‘Dravidian Phoenix’ என்ற புத்தகத்தையும் அவர் வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து, கட்சியின் ஆண்டு விழாவை முன்னிட்டு தொண்டர்களுக்கு வாழ்த்து தெரிவித்து எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், எம்.ஜி.ஆரின் தியாகத்தால் உருவான அ.தி.மு.க., ஜெயலலிதாவின் உறுதியான தலைமையில் பாதுகாக்கப்பட்டு வளர்ந்த இயக்கம் என்று குறிப்பிட்டுள்ளார். கட்சியின் 54 ஆண்டுகாலப் பயணம் நிறைவடைந்து 55-வது ஆண்டில் நுழையும் இந்தத் தருணத்தில், அனைத்து கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

Advertisement
மேலும், “நூறு ஆண்டுகள் கடந்தாலும் இந்த இயக்கம் மக்களுக்காகவே செயல்படும்” என்ற ஜெயலலிதாவின் உறுதிமொழியை நிறைவேற்றும் வகையில், கட்சியின் வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். கடந்த காலங்களில் பல்வேறு எதிர்ப்புகளையும் சவால்களையும் கடந்து வெற்றிபெற்ற கட்சியினர், தற்போது எழுந்துள்ள அரசியல் சவால்கள், ஜனநாயகத்துக்கு எதிரான சக்திகள் மற்றும் மக்கள் விரோத ஆட்சி ஆகியவற்றை ஜனநாயக முறையில் எதிர்கொள்ள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார். இதற்காக தொண்டர்கள் ஒற்றுமையுடனும் உறுதியுடனும் செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். இறுதியாக, எம்.ஜி.ஆர். வகுத்த பாதையிலும், ஜெயலலிதா காட்டிய லட்சிய வழியிலும் பயணித்து, தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதுடன் மீண்டும் நல்லாட்சி அமைந்திட அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,535
🥈 Silver ₹240.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு