அதிமுக மாவட்ட செயலாளர் ராஜேஷ் தவெகவில் இணைந்தார்
தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெக, காங்கிரஸ் மற்றும் விசிக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்துள்ளது. அந்த அரசின் முதல்-அமைச்சராக விஜய் பொறுப்பு வகித்து வருகிறார்.தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் தொண்டர்கள் தொடர்ந்து தவெகவில் இணைந்து வருகின்றனர்.அந்த வரிசையில், வட சென்னை அதிமுக மாவட்ட செயலாளரான ராஜேஷ் இன்று தவெகவில் இணைந்தார்.
கடந்த சட்டசபைத் தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக அவர் போட்டியிட்டிருந்தார்.இன்று தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனாவை நேரில் சந்தித்த ராஜேஷ், அதிகாரப்பூர்வமாக தவெகவில் தனது இணைப்பை பதிவு செய்தார்.