Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
வெள்ளி | 04 செப்டம்பர் 2026 | 19 ஆவணி பராபவ வருடம்

அணித் தேர்வில் தவறுகள் நடப்பது உண்மைதான்: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர்

அணித் தேர்வில் தவறுகள் நடப்பது உண்மைதான்: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர்

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி, முதல் இரு டெஸ்ட் போட்டிகளிலும் மோசமான தோல்வியை சந்தித்தது. ஒரு இன்னிங்சில்கூட 200 ரன்களை எட்ட முடியாத நிலையில், 3-வது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக அணியில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டன. முகமது ரிஸ்வான், சல்மான் அலி ஆகா, இமாம் உல்-ஹக் உள்ளிட்ட 7 வீரர்கள் நீக்கப்பட்டு, அவர்களுக்குப் பதிலாக இளம் வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்டனர். மேலும், பயிற்சியாளர் சர்ப்ராஸ் அகமதுவும் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார்.பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இந்த முடிவுக்கு முன்னாள் கேப்டன்களான ரமீஷ் ராஜா, ரஷீத் லத்தீப், சாஹித் அப்ரிடி உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே வீரர்களை மாற்றுவது சரியான நடவடிக்கை அல்ல என்றும், இதனால் வீரர்களின் நம்பிக்கையும் மனஉறுதியும் பாதிக்கப்படும் என்றும் அவர்கள் விமர்சித்தனர்.இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொசின் நக்வி இந்த விவகாரம் குறித்து முதல்முறையாக விளக்கம் அளித்துள்ளார்அவர் கூறியதாவது:“பாகிஸ்தான் கிரிக்கெட் மோசமான நிலையில் இருப்பதாக கூறுவது சரியான விமர்சனம் அல்ல. ஒருநாள் போட்டி தரவரிசையில் 8-வது இடத்தில் இருந்த நாம் தற்போது 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளோம். கடந்த 6 ஒருநாள் தொடர்களில் 4-ல் வெற்றி பெற்றிருக்கிறோம்.

Advertisement
நமது வெற்றி சதவீதமும் 24-ல் இருந்து 73 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அழிந்துவிட்டதாக எப்படி கூற முடியும்?சமீபத்தில் இந்திய அணி அயர்லாந்திடம் டி20 போட்டியில் தோல்வியடைந்தது. அதேபோல், முத்தரப்பு தொடரில் தென்ஆப்பிரிக்க அணி நமீபியாவிடம் தோல்வியடைந்தது. இதனால் அந்த அணிகளின் கிரிக்கெட் முடிந்துவிட்டதாக அர்த்தமா? இதுபோன்ற சில பின்னடைவுகளை வைத்து ஒட்டுமொத்த அணியின் திறனை மதிப்பிட முடியாது.பாகிஸ்தான் கிரிக்கெட் முற்றிலும் அழிந்துவிட்டதாக சிலர் கூறுகின்றனர். தங்களது கிரிக்கெட் வாழ்க்கையில் எதையும் சாதிக்காதவர்கள் இதுபோன்று பேசுவது வேடிக்கையாக உள்ளது.சில நேரங்களில் அணித் தேர்வில் தவறுகள் ஏற்படுவது உண்மைதான். அதற்கான பொறுப்பை நானே ஏற்றுக்கொள்கிறேன். தொடரில் ஒவ்வொரு போட்டியும் முக்கியமானது. வீரர்கள் சிறப்பாக செயல்படாதபோது, அவர்களை நீக்கி மாற்று வீரர்களை அணியில் சேர்ப்பதைத் தவிர வேறு வழியில்லை.ஒரு அணியை 9-வது இடத்தில் இருந்து 3 அல்லது 6 மாதங்களுக்குள் முதலிடத்துக்கு கொண்டு வருவது சாத்தியமில்லை. அதற்கு நீண்ட பயணம் தேவைப்படுகிறது. ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதைப் போலவே, டெஸ்ட் கிரிக்கெட்டிலும் முன்னேற்றத்தை எதிர்பார்க்கிறோம்” என்று மொசின் நக்வி தெரிவித்துள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு