Skip to main content
🌤️ —°C
வியாழன் | 27 ஆகஸ்ட் 2026 | 11 ஆவணி பராபவ வருடம்

ரூ.2 லட்சம் கோடி மதிப்பில் சாலை திட்டங்கள் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தகவல்

ரூ.2 லட்சம் கோடி மதிப்பில் சாலை திட்டங்கள் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தகவல்
மிலாடி நபி பண்டிகையையொட்டி விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில், தமிழக சட்டசபை இன்று காலை 9.30 மணிக்கு மீண்டும் கூடியது. த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு சட்டசபையில் முதன்முறையாக கேள்வி நேரம் நடைபெற்றது. இதில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர்.திருத்துறைப்பூண்டியில் நிலவும் போக்குவரத்து நெரிசலை சுட்டிக்காட்டிய உறுப்பினர் மாரிமுத்து, அங்கு ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்படுமா என கேள்வி எழுப்பினார்.இதற்கு பதிலளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ரெயில்வே மேம்பாலங்கள் அமைப்பது தொடர்பாக துறை சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறினார்.மேலும், திருத்துறைப்பூண்டி மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ரெயில்வே கிராசிங் பகுதிகளில் மேம்பாலங்கள் இல்லாத நிலை உள்ளதாக அவர் குறிப்பிட்டார். சில இடங்களில் ரெயில்வே கிராசிங்கில் வாகன ஓட்டிகள் ஒரு மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய சூழல் இருப்பதாகவும் தெரிவித்தார். டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் இந்த பிரச்சினை இருப்பது கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளதாக கூறினார்.அனைத்து மாவட்டங்களிலும் ரெயில்வே மேம்பாலங்கள் அமைப்பது முன்னுரிமை பணியாக மேற்கொள்ளப்படும் என்றும், அதேபோல் ரிங் ரோடு தொடர்பான பிரச்சினைக்கும் விரைவில் தீர்வு காணப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.இதைத்தொடர்ந்து முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவுவதாக தெரிவித்தார். தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரையிலான உயர்மட்ட மேம்பாலத்துக்கான பணிகள் அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ஒப்புதல் பெற்று தொடங்க இருந்ததாகவும், ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டதாகவும் கூறினார். எனவே, அந்த பணிகளை மீண்டும் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, சென்னை முதல் கன்னியாகுமரி வரை சாலையை எட்டுவழிச் சாலையாக மாற்றும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
Advertisement
இதுதொடர்பாக மத்திய அமைச்சருடனான சந்திப்பிலும் வலியுறுத்தியுள்ளதாக கூறினார்.சென்னை-கன்னியாகுமரி வரையிலான சாலையை எட்டுவழிச் சாலையாக மேம்படுத்துவது அடுத்த 30 ஆண்டுகளுக்கான போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வாக அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.திருச்சியில் இருந்து செங்கல்பட்டு வருவதற்கு 4 மணி நேரம் ஆகும் நிலையில், செங்கல்பட்டில் இருந்து சென்னை வருவதற்கே 3 மணி நேரம் ஆகிறது என அமைச்சர் சுட்டிக்காட்டினார். அதேபோல் பெங்களூருவில் இருந்து திருவள்ளூர் வர 3 மணி நேரம் போதுமான நிலையில், திருவள்ளூரில் இருந்து சென்னைக்குள் வருவதற்கும் 3 மணி நேரம் ஆகிறது என்றார். மகாபலிபுரத்தில் இருந்தும் சென்னை வருவதற்கு சுமார் 3 மணி நேரம் ஆகும் நிலை இருப்பதாக தெரிவித்தார்.இதனால் சென்னையைச் சுற்றியுள்ள சாலைகள் மேம்படுத்தப்படும் என்றும், இதுகுறித்து மத்திய அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் நல்ல செய்தி அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.மேலும், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் நடைபெற்று வரும் சாலை திட்டங்களில் ஏற்பட்டுள்ள தொய்வு குறித்தும், தமிழகத்துக்கு தேவையான சாலை திட்டங்கள் குறித்தும் மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சரிடம் நேரில் வலியுறுத்தியதாக ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான சாலை திட்டங்களை மேற்கொள்ள மத்திய அரசு தயாராக இருப்பதாகவும், மத்திய சாலை நிதியை ரூ.1,000 கோடியாக உயர்த்தி வழங்க உறுதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். முந்தைய ஆட்சியின் இடர்பாடுகள் காரணமாக தமிழகத்துக்கு திட்டங்கள் வரவில்லை என்றும், அந்த தடைகள் நீக்கப்பட்டால் மத்திய அரசிடம் இருந்து தமிழகத்துக்கு ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான சாலை திட்டங்களை பெற முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு