Skip to main content
🌤️ —°C
வியாழன் | 30 ஜூலை 2026 | 14 ஆடி பராபவ வருடம்

பாளையங்கோட்டை சிறையில் உள்ள திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனை சந்தித்த உதயநிதி ஸ்டாலின்

பாளையங்கோட்டை சிறையில் உள்ள திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனை சந்தித்த உதயநிதி ஸ்டாலின்
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதியைச் சேர்ந்த திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன், கோவில்பட்டியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசியபோது முதல்-அமைச்சர் விஜயை மிரட்டும் விதமாகவும், அவதூறாகவும் கருத்து தெரிவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் கடந்த 21ஆம் தேதி போலீசார் மார்க்கண்டேயனை கைது செய்தனர். பின்னர் அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை நீதிமன்றம் நிராகரித்ததுடன், 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கவும் உத்தரவிட்டது. இதையடுத்து, அவர் நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இந்த நிலையில், இன்று துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாளையங்கோட்டை சிறைக்கு சென்று மார்க்கண்டேயனை நேரில் சந்தித்தார்.
Advertisement
அப்போது அவரிடம் நலம் விசாரித்து ஆறுதல் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.இந்தச் சந்திப்பின் போது திமுக முன்னாள் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன், சபாநாயகர் அப்பாவு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் உதயநிதி ஸ்டாலினுடன் சிறைக்கு சென்று மார்க்கண்டேயனை சந்தித்தனர்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு