Skip to main content
🌤️ —°C
வியாழன் | 30 ஜூலை 2026 | 14 ஆடி பராபவ வருடம்

பனிமய மாதா பேராலயத் திருவிழா முன்னேற்பாடுகள் தீவிரம்: அமைச்சர் ஸ்ரீநாத் நேரில் ஆய்வு

பனிமய மாதா பேராலயத் திருவிழா முன்னேற்பாடுகள் தீவிரம்: அமைச்சர் ஸ்ரீநாத் நேரில் ஆய்வு
தூத்துக்குடியில் உள்ள தூய பனிமய மாதா பேராலயத்தின் ஆண்டு திருவிழா ஜூலை 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ள நிலையில், விழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் ஏற்பாடுகள் குறித்து மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் ஆய்வு மேற்கொண்டார்.திருவிழாவை முன்னிட்டு அனைத்து துறை அதிகாரிகளின் ஒருங்கிணைப்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு அமைச்சர் ஸ்ரீநாத் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் விஷூ மகாஜன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவிழா நிகழ்ச்சிகளின் அட்டவணைப்படி, ஜூலை 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. ஆகஸ்ட் 2-ஆம் தேதி நற்கருணை பவனியும், ஆகஸ்ட் 5-ஆம் தேதி நகரின் முக்கிய வீதிகள் வழியாக மாதா சப்பர பவனியும் நடைபெற உள்ளன.திருவிழா நாட்களில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உறுதி செய்வது குறித்து கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. தற்காலிக சுகாதார வளாகங்கள் அமைத்தல், கூடுதல் தூய்மை பணியாளர்களை நியமித்து சுத்தம் மற்றும் குளோரினேஷன் பணிகளை மேற்கொள்ளுதல், தெருவிளக்குகளை பராமரித்தல், சேதமடைந்த சாலைகளை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது., பாதுகாப்பான குடிநீர் விநியோகத்திற்காக தேவையான இடங்களில் தற்காலிக குடிநீர் தொட்டிகள் அமைத்தல், புதிய மற்றும் பழைய பேருந்து நிலையங்களிலிருந்து பேராலயம் வழியாக கூடுதல் உள்ளூர் பேருந்துகளை இயக்குதல், மின்தடை ஏற்படாத வகையில் பகுதி வாரியாக ஒயர்மேன்களை நியமித்து கண்காணித்தல், மருத்துவ முகாம்கள், தேவையான மருந்துகள் மற்றும் ஆம்புலன்ஸ் வசதிகளை ஏற்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளும் ஆலோசிக்கப்பட்டன.பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, தீயணைப்பு வாகனங்களுடன் வீரர்களை தயார் நிலையில் வைத்திருப்பது, காவல்துறை சார்பில் கண்காணிப்பு கேமராக்கள், கண்காணிப்பு கோபுரங்கள் மற்றும் சோதனைச் சாவடிகள் அமைப்பது குறித்து அறிவுறுத்தப்பட்டது.
Advertisement
போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் மாற்றுப் பாதைகள் திட்டமிடுவதும், தற்காலிக வாகன நிறுத்துமிடங்களை ஏற்படுத்துவதும் முடிவு செய்யப்பட்டது.கூட்டத்தின் போது பேசிய அமைச்சர் ஸ்ரீநாத், தூத்துக்குடி அருகே திட்டமிடப்பட்டுள்ள கப்பல் கட்டும் தளம் தொடர்பான பல்வேறு கட்ட ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அவை நிறைவடைந்ததும் அடுத்தகட்ட பணிகள் விரைவாக முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.தொடர்ந்து, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் 34 பேருக்கு புதிய குடும்ப அட்டைகளை அமைச்சர் வழங்கினார். பின்னர், தூய பனிமய மாதா பேராலயத்திற்குச் சென்று திருவிழாவை முன்னிட்டு நடைபெற்று வரும் முன்னேற்பாட்டு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்தக் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சுப்புலட்சுமி, மாவட்ட வழங்கல் அலுவலர் சுதா, உதவி ஆட்சியர் பிரபு, பயிற்சி உதவி ஆட்சியர் பாட்டீல் கிருஷ்ணா பபுருவான், பேராலய பங்குத்தந்தை ஜான்செல்வம் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் பலர் பங்கேற்றனர்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு