Skip to main content
🌤️ —°C
செவ்வாய் | 18 ஆகஸ்ட் 2026 | 2 ஆவணி பராபவ வருடம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆர்.ஜே.பாலாஜி சாமி தரிசனம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆர்.ஜே.பாலாஜி சாமி தரிசனம்
திரைப்பட நடிகரும் இயக்குநருமான ஆர்.ஜே.பாலாஜி, தனது மனைவியுடன் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். மூலவர் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்மன் சன்னதிகளில் வழிபாடு மேற்கொண்ட அவர், நெய் தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்தார்.அப்போது ஆன்மீகச் சுற்றுலாவுக்காக கோயிலுக்கு வந்திருந்த ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் சிலர், ஆர்.ஜே.பாலாஜியை அடையாளம் கண்டுகொண்டனர். அவரை அணுகி அன்புடன் பேசிய அவர்கள், அவருடன் இணைந்து ஆர்வத்துடன் செல்பி புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டனர்.
Advertisement
இந்த நிகழ்வு அங்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தரிசனம் முடிந்து கோயிலில் இருந்து வெளியே வந்த ஆர்.ஜே.பாலாஜியிடம், அவரது அடுத்த திரைப்படம் தொடர்பான தகவல்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளிக்காமல், பக்தி உணர்வுடன் "ஓம் நமசிவாய" என்று கூறியபடி அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு