Skip to main content
🌤️ —°C
வியாழன் | 30 ஜூலை 2026 | 14 ஆடி பராபவ வருடம்

திருப்பதியில் இலவச தரிசனத்திற்கு 18 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்

திருப்பதியில் இலவச தரிசனத்திற்கு 18 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் மட்டும் 70,216 பேர் சுவாமி தரிசனம் செய்ததாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.அவர்களில் 27,606 பக்தர்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர். அதே நாளில் உண்டியலில் ரூ.4 கோடியே 77 லட்சம் காணிக்கையாக வசூலானது.மேலும், 4 லட்சத்து 8 ஆயிரம் லட்டுகள் பக்தர்களுக்கு விற்பனையாகின.
Advertisement
அன்னபிரசாதத்தை 2 லட்சத்து ஆயிரம் பேர் பெற்றுக் கொண்டனர். 3,673 பக்தர்களுக்கு மருத்துவ சேவைகளும் வழங்கப்பட்டன.தற்போது தரிசனத்திற்காக காத்திருக்கும் வரிசை சிலாத்தோரணம் பகுதியைத் தாண்டி நீண்டுள்ளது. எஸ்.எஸ்.டி. டோக்கன் இல்லாத சர்வதரிசனத்திற்கு வரும் பக்தர்கள் சுவாமியை தரிசிக்க சுமார் 18 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு