Skip to main content
🌤️ —°C
வியாழன் | 30 ஜூலை 2026 | 14 ஆடி பராபவ வருடம்

திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கைது: சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் விளக்கம்

திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கைது: சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் விளக்கம்
திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் விளக்கம் அளித்துள்ளார்.சட்டமன்ற உறுப்பினரை கைது செய்வதற்கு முன் கட்டாயமாக பேரவைத் தலைவரின் அனுமதி பெற வேண்டும் என்ற விதி எதுவும் இல்லை. ஆனால், சட்டப்பேரவை விதி எண் 291-ன் படி, பேரவைத் தலைவரின் முன் அனுமதியின்றி சட்டப்பேரவையின் அமைப்பு எல்லைக்குள் யாரையும் கைது செய்யக் கூடாது. அதேபோல், உரிமையியல் அல்லது குற்றவியல் நீதிமன்றங்களின் உத்தரவு, சம்மன் அல்லது பிற அறிவிப்புகளையும் அந்த எல்லைக்குள் வழங்க அனுமதி இல்லை என்று அவர் தெரிவித்தார்.மேலும், "பேரவையின் அமைப்பு எல்லை" என்றால் என்ன என்பது உறுப்பினர்களுக்கும் பொதுமக்களுக்கும் தெளிவாக இருக்க வேண்டும் என்றார். அதன்படி, பேரவை மண்டபம், அதன் புறக்கூடங்கள், அதனைச் சார்ந்த அலுவலகங்கள், அமைச்சர்களின் அறைகள், நூலகம், சிற்றுண்டிச்சாலை, தலைமைச் செயலகத்தில் உள்ள குழுக் கூட்ட அறைகள், அண்ணா சாலையில் உள்ள அரசினர் தோட்ட உறுப்பினர் குடியிருப்பின் குழுக் கூட்ட அறைகள், நூலகம் மற்றும் பேரவைத் தலைவர் அவ்வப்போது அறிவிக்கும் பிற இடங்கள் அனைத்தும் அந்த எல்லைக்குள் அடங்கும் என்று விளக்கினார்.இந்த எல்லைக்கு வெளியே நடைபெறும் சம்பவங்களில் சட்டமன்ற உறுப்பினரை கைது செய்ய பேரவைத் தலைவரின் அனுமதி தேவையில்லை என்றும் அவர் கூறினார்.
Advertisement
மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டதும், சம்பந்தப்பட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனக்கு தகவல் தெரிவித்ததாகவும் தெரிவித்தார்.ஒரு சட்டமன்ற உறுப்பினர் 24 மணி நேரத்திற்கும் அதிகமாக காவலில் வைக்கப்பட்டால், அதுகுறித்து மற்ற உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிப்பது தனது பொறுப்பு என்றும், அதன்படி மார்க்கண்டேயன் கைது தொடர்பான தகவல் அனைத்து உறுப்பினர்களுக்கும் தெரிவிக்கப்படும் என்றார்.இந்த விவகாரம் தொடர்பாக தனது கவனத்திற்கு முறையாக கொண்டு வரப்பட்டால், சட்டம் மற்றும் பேரவை விதிகளின் அடிப்படையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும் என்றும், எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்கப்பட்டால் விதிமுறைகளுக்கு இணங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்தார்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு