தமிழக காவல்துறை பெயரில் பரவும் பெண்கள் பாதுகாப்பு தகவல்: உண்மை என்ன?
தனியாக ஆட்டோ அல்லது காரில் பயணம் செய்யும் பெண்கள், தாங்கள் செல்லும் வாகனத்தின் பதிவு எண்ணை 9969777888 என்ற எண்ணுக்கு அனுப்பினால், காவல்துறையினர் அந்த வாகனத்தை GPRS மூலம் கண்காணிப்பார்கள் என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.தமிழ்நாடு காவல்துறையின் பெயர் மற்றும் சின்னத்துடன் பகிரப்படும் இந்த தகவல் உண்மையானது அல்ல என உண்மைச் சரிபார்ப்புகள் தெரிவிக்கின்றன. 9969777888 என்ற எண் தமிழக காவல்துறையின் பெண்கள் பாதுகாப்பு சேவைக்கான எண் கிடையாது.
இந்த எண் உண்மையில் 2014-ம் ஆண்டு மும்பை காவல்துறையால் தொடங்கப்பட்ட பெண்களுக்கான ‘Travel Safe When Alone’ என்ற சேவையில் பயன்படுத்தப்பட்டது.
ஆனால் அந்த சேவை 2017-ம் ஆண்டிலேயே நிறுத்தப்பட்டுவிட்டதாக பதிவுகள் தெரிவிக்கின்றன.எனவே, இந்த எண்ணுக்கு வாகனப் பதிவு எண்ணை அனுப்பினால் காவல்துறையினர் கண்காணிப்பார்கள் என்ற தகவலை நம்பி பகிர வேண்டாம்.பெண்களின் இரவு நேரப் பயண பாதுகாப்புக்காக தமிழக காவல்துறை தற்போது 1091, 112, 044-23452365 மற்றும் 044-28447701 ஆகிய உதவி எண்களை வழங்குகிறது.