டில்லி செங்கோட்டைக்கு வெடிகுண்டு மிரட்டல்
புதுடெல்லியில் ;தலைநகர் டெல்லியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து போலீசார், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். செங்கோட்டை வளாகம் முழுவதும் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
பார்வையாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, நுழைவு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேலும் வலுப்படுத்தப்பட்டன.
சந்தேகத்திற்கிடமான பொருட்கள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து அதிகாரிகள் விரிவாக ஆய்வு மேற்கொண்டனர்.
மிரட்டல் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. தகவல் எங்கிருந்து வந்தது, அதன் நம்பகத்தன்மை என்ன என்பது உள்ளிட்ட விவரங்களை போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.