டாஸ்மாக் பார்கள் மேலும் 3 மாதங்கள் இயங்க அனுமதி? - இன்று முக்கிய முடிவு...
சென்னை: தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபானக் கடைகளுடன் இணைந்துள்ள பார்களின் எதிர்காலம் குறித்து இன்று முக்கிய முடிவு வெளியாக உள்ளது. உரிமம் காலாவதியான நிலையில், தற்போதைய பார் உரிமையாளர்களுக்கு மேலும் 3 மாதங்கள் செயல்பட அனுமதி வழங்கப்படுமா என்பது குறித்து டாஸ்மாக் வாரியம் ஆலோசனை நடத்துகிறது.
கடந்த ஜூன் 30-ஆம் தேதியுடன் பல பார்களின் உரிமங்கள் முடிவடைந்ததால், அவற்றை தற்காலிகமாக மூட அரசு உத்தரவிட்டது. இதையடுத்து பார் உரிமையாளர்கள், புதிய டெண்டர் நடைமுறை நிறைவடையும் வரை இடைக்காலமாக மேலும் 3 மாதங்கள் அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த கோரிக்கையை பரிசீலிக்கும் டாஸ்மாக் வாரியக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவின் அடிப்படையில் பார்கள் மீண்டும் திறக்கப்படுமா அல்லது புதிய உரிமம் வழங்கும் வரை மூடப்பட்டே இருக்குமா என்பது தெளிவாகும்.
இதனால் பார் உரிமையாளர்கள், அங்கு பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்குப் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.