Skip to main content
🌤️ —°C
புதன் | 26 ஆகஸ்ட் 2026 | 10 ஆவணி பராபவ வருடம்

கிணற்றில் காதலி சடலமாக மீட்பு; அதிர்ச்சியில் காதலன் தற்கொலை

கிணற்றில் காதலி சடலமாக மீட்பு; அதிர்ச்சியில் காதலன் தற்கொலை
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பாலி கிராமத்தைச் சேர்ந்த தனக்கண்ணுவின் மகன் கவிதாஸ் (26). ஐ.டி.ஐ. படித்துள்ள இவர், டிராக்டர் ஓட்டி வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த சங்கரின் மகள் கிருஷ்ணவேணி (23), பி.எஸ்சி., பி.எட். படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 23-ந்தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற கிருஷ்ணவேணி அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது தாய் சாந்தி, எடைக்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இதற்கிடையே, பாலி கிராமத்தில் உள்ள உறவினரின் கிணற்றில் கிருஷ்ணவேணி சடலமாக மிதந்ததை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து தீயணைப்பு வீரர்களும், எடைக்கல் போலீசாரும் சம்பவ இடத்துக்கு சென்று கிருஷ்ணவேணியின் உடலை மீட்டனர்.உடலை பார்த்த அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். பின்னர் போலீசார் உடலை கைப்பற்றி உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கிருஷ்ணவேணியின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதனிடையே, காதலி உயிரிழந்த தகவலால் கவிதாஸ் அதிர்ச்சியடைந்ததாக கூறப்படுகிறது.
Advertisement
காதலியின் பிரிவை தாங்க முடியாமல், கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே மங்கலம்பேட்டை காட்டுப்பரூர் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்துக்கு அவர் சென்றுள்ளார். அங்கு சோகத்துடன் இருந்த கவிதாஸ், நேற்று காலை மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த மங்கலம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிசாமி தலைமையிலான போலீசார் அங்கு சென்று கவிதாஸின் உடலை மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதலுக்கு எதிர்ப்பு ஏற்பட்டதன் காரணமாக இருவரும் இந்த முடிவை எடுத்தார்களா அல்லது வேறு ஏதேனும் பிரச்சினை காரணமாக இருந்ததா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. ஒரே சம்பவத்தில் காதலியும், காதலனும் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு