Skip to main content
🌤️ —°C
வியாழன் | 30 ஜூலை 2026 | 14 ஆடி பராபவ வருடம்

இங்கிலாந்து அமைச்சரவையில் இந்திய வம்சாவளியினருக்கு முக்கிய பொறுப்புகள்

இங்கிலாந்து அமைச்சரவையில் இந்திய வம்சாவளியினருக்கு முக்கிய பொறுப்புகள்
இங்கிலாந்தின் புதிய பிரதமராக ஆண்டி பர்ன்ஹாம் பொறுப்பேற்ற பிறகு, அமைச்சரவையில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக, தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த இந்திய வம்சாவளி கொண்ட மூன்று எம்.பி.க்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.அதன்படி, கனிஷ்கா நாராயண், இங்கிலாந்தின் முதல் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். வர்த்தகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளுடன் இணைந்து செயற்கை நுண்ணறிவு தொடர்பான நடவடிக்கைகளை அவர் முன்னெடுப்பார்.சத்வீர் கவுர், சமத்துவத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.
Advertisement
பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்குதல் மற்றும் சமத்துவம் தொடர்பான திட்டங்களை மேற்பார்வை செய்வது அவரது முக்கிய பொறுப்பாக இருக்கும்.மேலும், ஹர்பிரீத் உப்பல் தொழிலாளர் கட்சியின் உதவிக் கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் ஒழுங்கு மற்றும் விதிமுறைகளை ஒருங்கிணைக்கும் பணிகளை அவர் மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு