4 நாட்களில் ரூ.100 கோடி வசூல்: பாக்ஸ் ஆபீஸில் மாஸ் காட்டும் ரவி தேஜாவின் ‘இருமுடி’
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரவி தேஜா நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘இருமுடி’. சிவா நிர்வாணா இயக்கியுள்ள இப்படம், திரையரங்குகளில் வெளியானது முதல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. வசூலிலும் படம் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது.இதுவரை ரசிகர்கள் பார்த்து வந்த தனது வழக்கமான மாஸ் ஹீரோ பாணியில் இருந்து விலகி, ரவி தேஜா இப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார். இந்த புதிய அணுகுமுறை படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.கடந்த நான்கு ஆண்டுகளாக எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியாமல் இருந்த ரவி தேஜாவுக்கு ‘இருமுடி’ மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தந்துள்ளது.
படம் வெளியாகி நான்கு நாட்களிலேயே உலகளவில் ரூ.100 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.மேலும், ரவி தேஜாவின் திரைப்பயணத்தில் மிகக் குறுகிய காலத்தில் ரூ.100 கோடி வசூல் கிளப்பில் இணைந்த திரைப்படம் என்ற பெருமையையும் ‘இருமுடி’ பெற்றுள்ளது. இப்படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார்.