Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வெள்ளி | 09 அக்டோபர் 2026 | 23 புரட்டாசி பராபவ வருடம்

திருக்கோவில் பணியாளர்களுக்கு திருமணக் கடன் உயர்வு – தமிழக அரசு அரசாணை வெளியீடு

திருக்கோவில் பணியாளர்களுக்கு திருமணக் கடன் உயர்வு – தமிழக அரசு அரசாணை வெளியீடு

திருக்கோவில்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் திருமணக் கடன் தொகையை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி, முதுநிலைத் திருக்கோவில்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ரூ.2 லட்சமும், முதுநிலை அல்லாத திருக்கோவில்களில் பணியாற்றுவோருக்கு ரூ.1 லட்சமும் திருமணக் கடனாக வழங்கப்பட உள்ளது. தமிழக முதலமைச்சர் விஜய்யின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், 2026–27ஆம் ஆண்டுக்கான துறையின் மானியக் கோரிக்கையின்போது சட்டப்பேரவையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். திருக்கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்வது, ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களைப் புதுப்பிப்பது, பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது, கல்வி நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் பணியாளர்களின் நலன் உள்ளிட்ட அம்சங்கள் அந்த அறிவிப்புகளில் இடம்பெற்றிருந்தன. இதன் ஒரு பகுதியாக, திருக்கோவில் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் திருமணக் கடன் தொகை அதிகரிக்கப்படும் என அறிவிப்பு எண் 81-ன் கீழ் தெரிவிக்கப்பட்டது. தற்போது அந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement
முன்னதாக, திருக்கோவில் பணியாளர்கள் மற்றும் அவர்களது வாரிசுகளின் திருமணத்திற்காக ஆண் பணியாளர்களுக்கு ரூ.6,000-மும், பெண் பணியாளர்களுக்கு ரூ.10,000-மும் கடனாக வழங்கப்பட்டு வந்தது. தற்போது இந்தத் தொகை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய கடன் வரம்பு, இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் அனைத்து திருக்கோவில்களிலும் பணிபுரியும் ஊழியர்களுக்கும் பொருந்தும். வழங்கப்படும் கடன் தொகை, அரசு ஊழியர்களுக்கான நடைமுறைகளின்படி 36 மாதத் தவணைகளில் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்து திரும்பப் பெறப்படும். திருக்கோவில் பணியாளர்களின் பணிசார் நலன், குடும்ப நலன் மற்றும் சமூகப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், ஈட்டிய விடுப்பு ஒப்படைப்புக்கான பணப்பலன், மகப்பேறு விடுப்பு மற்றும் திருமணக் கடன் உயர்வு உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளுக்கு அரசு விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கோவில் பணியாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,710
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு