Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 12 செப்டம்பர் 2026 | 27 ஆவணி பராபவ வருடம்

விருதுநகரில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: 69 வயது முதியவர் போக்சோ சட்டத்தில் கைது

விருதுநகரில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: 69 வயது முதியவர் போக்சோ சட்டத்தில் கைது

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக 69 வயதுடைய முதியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.திருச்சுழி பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமி, தனது வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த சின்ன அண்ணன் (69) என்பவர் சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.இந்த சம்பவம் குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து, அவரது தாய் திருச்சுழி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

Advertisement
புகாரைத் தொடர்ந்து போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையின் அடிப்படையில், சின்ன அண்ணன் மீது போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
PRGI NO : TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு