வங்கி மேலாளர் கன்னத்தில் பளார் விட்ட மு.க.அழகிரி மகள்
சென்னை அடையாறில் கயல்விழிக்கு சொந்தமான கட்டிடத்தில் செயல்பட்டு வரும் எஸ்பிஐ வங்கியின் மேலாளரை அவர் அறைந்ததாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் சகோதரரான மு.க.அழகிரி, முன்னாள் மத்திய அமைச்சராகவும், தென்மண்டல அமைப்பு செயலராகவும் இருந்தவர். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, அவர் அரசியல் நடவடிக்கைகளில் இருந்து விலகி உள்ளார்.சமீபத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. தோல்வியடைந்து, த.வெ.க. ஆட்சியை அமைத்தது. முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற விஜய்க்கு, அழகிரியின் மகள் கயல்விழி வாழ்த்து தெரிவித்ததுடன், பின்னர் சென்னை தலைமைச் செயலகத்தில் அவரை நேரில் சந்தித்தும் வாழ்த்து கூறினார்.இந்நிலையில், அடையாறில் கயல்விழிக்கு சொந்தமான கட்டிடத்தில் இயங்கி வரும் எஸ்பிஐ வங்கியில், லிப்ட் செயல்படவில்லை என வங்கி நிர்வாகம் கட்டிட உரிமையாளரிடம் புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கயல்விழி தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.அப்போது, வங்கி மேலாளர் ஹர்ஷீன் சிங், கன்னத்தில் கையை வைத்தபடி அமைதியாக அமர்ந்திருந்ததை கயல்விழி எதிர்த்து, ஆவேசமாக அவரது கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது. அச்சமயம் உடன் இருந்த ஒருவர் தலையிட்டு அவரை சமாதானப்படுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த சம்பவம் தொடர்பாக கயல்விழி மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.